96 ரீமேக்கில் மாற்றமா? இல்லை என்று மறுத்துள்ள இயக்குனர்

சென்னை:
96 படத்தின் ரீமேக் கதையில் மாற்றம் என்ற தகவலை மறுத்துள்ளார் இயக்குனர் பிரேம்குமார்.

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் இயக்கிய பிரேம் குமார் தான் தெலுங்கிலும் இயக்குகிறார்.

சர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்தில் தமிழில் இருப்பது போல பள்ளி பகுதி இருக்காது, அதற்கு பதில் கல்லூரியில் நடப்பது போல் காட்டப்படும் என சில நாட்கள் முன்பு தகவல் பரவியது.

ஆனால் அதை இயக்குனர் மறுத்துள்ளார். “பள்ளியில் ஆரம்பிக்கும் காதல் என்பது தான் முக்கிய கரு” என அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!