A சான்றிதழுடன் நயன்தாராவின் படம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சைக்கோ – திரில்லர் படமான ‘இமைக்கா நொடிகள்’ யு/ஏ சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதனை ஆகஸ்ட் 30 – ம் தேதி வெளியிடலாம் என படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் சி.பி.ஐ அதிகாரியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி அவரது கணவராக நடிக்கிறார். நயன்தாராவின் சகோதரராக அதர்வா நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் சைக்கோ வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

நேற்று தான் நயனின் கோலமாவு கோகிலா படம் ரிலீஸ் ஆனது. அந்தக் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்களுக்கு, இன்னும் 2 வாரத்தில் மேலும் இன்னொரு படம் ரிலீஸ் ஆகும் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா தயாரித்திருக்கும் இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். படத்திற்கு இசை ஹிப்பாப் தமிழா ஆதி.

Sharing is caring!