நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம்

பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா (40) மாரடைப்பால் இன்று காலமானார்.

ஹிந்தி பிக் பாஸ் 13 ஆம் பருவ நிகழ்ச்சியை வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா.

ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, இரு படங்களில் நடித்துள்ளார்.

2008 இல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014 இல் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் மரணமடைந்துள்ளார் சித்தார்த் சுக்லா.

அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரை காப்பாற்ற முடியவில்லை.

Sharing is caring!