பிரபல நடிகரின் கையை கடித்த நடிகை..!

தெலுங்கு நடிகர் சங்கமான மாவின் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மன்சு தலைமையிலான இரண்டு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு அணிகளும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டதுடன், ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று, தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், முடிவுகள் நேற்று இரவே அறிவிக்கப்பட்டன. இதில், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மன்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் பிரகாஷ் ராஜ் அணியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர், வாக்குப்பதிவின்போது பிரச்சாரம் செய்தார். அதை மனோன் மன்சு அணியைச் சேர்ந்த நடிகர் சிவபாலாஜி எதிர்த்தார்.  அப்போது, பிரகாஷ்ராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவ பாலாஜியின் கையை திடீரென கடித்தார். இதை எதிர்பார்க்காத சிவபாலாஜி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!