‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்படத்திற்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்து சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குனர் மோகன் ஜி பதிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள அந்த படத்தை தடை செய்வதோடு, இயக்குனர் மோகன் ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Sharing is caring!