இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா… காரணம் தெரியுமா?

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள். சூர்யா தனது பிறந்தநாளை ஜூலை 23 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்.இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி – யை இன்று வெளியிட்டார்கள். இந்த காமன் டிபி பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Sharing is caring!