பிரபல திரைப்பட நடிகை சசிகலா காலமானார்

பிரபல திரைப்பட நடிகை சசிகலா தனது 88வது வயதில் காலமானார்.

இந்தி திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சசிகலா நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து சசிகலா புகழ்பெற்றார்.

பல திரைப்படங்களில் வில்லி வேடத்திலும் கலக்கி ரசிகர்களின் கைத்தட்டலை அவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று சசிகலா காலமானார்.

அவர் மரணத்திற்கான காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

திரையுலக ஜாம்பவான் சசிகலாவின் மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!