பிரபல ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்…!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பால் ரிட்டர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹாரி பாட்டர் அண்டு தி ஹாஃப் பிளட் பிரின்ஸ் மற்றும் Chernobyl உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பால் ரிட்டர் (paul ritter, 54).

கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த ஹாரி பாட்டர் பட வரிசையில் எல்டிரட் வார்ப்பிள் என்கிற வேடத்தில் நடித்துள்ள இங்கிலாந்து நாட்டு நடிகரான பால் ரிட்டர் அண்மை காலமாக தமது மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்கென பால் ரிட்டர், தொடர்ந்து தமது மூளைக் கட்டியை சரிசெய்ய சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த திங்கட்கிழமை பால் ரிட்டர் பரிதாபகரமான நிலையில் உயிரிழந்தார்.

பால் ரிட்டர் தனது வீட்டில் மனைவி பாலி மற்றும் மகன்கள் பிராங்க் மற்றும் நோவா ஆகியோர் தம்முடன் இருக்கும் ஒரு சூழலில் அமைதியான முறையிலேயே அவருடைய உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலஸ் படத்திலும் பால் நடித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான இந்த படத்தைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டில் இருந்து பிரைடே நைட் டின்னர் என்கிற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார் பால் ரிட்டர். பால் ரிட்டரின் மறைவுக்கு உலகத் திரை உலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!