பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கிறாரா? மாஸ்டர் பட நடிகர்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5-ல் மாஸ்டர் பட நடிகர் ஒருவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இதன் முன்னோட்டமாக நேற்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் பல நட்சத்திரங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரனிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “பிக் பாஸ் 5” தாங்கள் பங்கேற்கவுள்ளதாக பரவி வந்த தகவல் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு மாஸ்டர் மகேந்திரன் “வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் இதுல வேற… உள்ள வேற…” என பதிலளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!