மெட்டி ஒலி’ புகழ் உமா காலமானார்

பிரபல தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய ‘மெட்டி ஒலி’ தொடர் புகழ் உமா மகேஸ்வரி தனது 40 ஆவது வயதில் இன்று (17) காலமானார்.

இந்த தொடரில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமாவின் நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.

பின்னர் வெற்றிக்கொடி கட்டு, உன்னை நினைத்து உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

உடல்நல குறைவினால் உயிரிழந்த உமா மகேஸ்வரிக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!