Mr. லோக்கல் திரைப்படம் குறித்த தகவல்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் எதிர்வரும் 20ஆம் திகதி வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹிப் ஹொப் ஆதி இசையில் உருவாகிவரும் இத்திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

தம்பி ராமையா இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். அவர் நயன்தாராவுடன் படம் முழுவதும் வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர் என ஒரு நகைச்சுவை பட்டாளமே இருக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின்  அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.

Sharing is caring!