‘தலைவி’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி உள்ள தலைவி படம் செப் 10-ந் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி உள்ள படம். ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள, இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலைவி படத்தின் ரிலீசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு பின்னர் 15 நாட்களில் ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள், 4 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்களாம். இதனை ஓடிடி நிறுவனம் ஒப்புக்கொள்ளாததால், இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Sharing is caring!