மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் போஸ்டரை இன்று வெளியானது.

கல்கின் பிரமாண்ட நாவலான ‘பொன்னியின் செல்வனை’ சினிமாவாக இயக்கி வருகிறார் மணிரத்னம். இப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம் உட்பட பலர் நடித்து வருகின் றனர். இந்தப் படத்துக்காக அனைவரும் அதிகமாக தலைமுடி வளர்த்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் முதலில் நடந்தது. பின்னர், புதுச்சேரி, ஐதாராபாத்தில் நடந்தது. கொரோனாவால் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு இப்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது. அதிகமான பட்ஜெட்டில் லைகா தயாரிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது.

இதில் முதல் பாகத்துக்கான போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

Sharing is caring!