மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி

ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு 2’. ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘கோல்மால்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Sharing is caring!