RRR மூவிஸ்….ரசிகர்களே டைட்டிலை வையுங்க…?

எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு மெகா ஸ்டார்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில்  RRR என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். ஹைதராபாத் அருகே கொக்கபேட் என்ற இடத்தில்  பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .

தமிழ், மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதுகிறார். மரகதமணி இசையமைக்கிறார். டிவிவி மூவீஸ் சார்பில் தனய்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் RRR படத்தின் தலைப்பிற்கான பரிந்துரைகளை  ரசிகர்களிடம்  எதிர்பார்க்கப்படுவதாகவும், அதிலிருந்து பொறுத்தமான தலைப்பு தேர்ந்தெடுக்கப்படும் என  RRR  மூவிஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!