சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்

சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சந்தானம், ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.

இந்நிலையில், நடிகர் சந்தானம், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சந்தானம், இப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் என தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Sharing is caring!