காதலியை கரம் பிடித்தார் சினேகன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் பாடலாசிரியர் சினேகனின் திருமணம் நடந்துள்ளது.

தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன்.

இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது.

இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகா ரவி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!