பாண்டியன் ஸ்டோர்ஸில் திடீர் மரணம்!

பாண்டியன் ஸ்டோர்ஸில் அம்மா லட்சுமி மரணமடைந்து விட்டதாக ப்ரோமா காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு அண்ணன்- தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு குடும்ப பாங்கான கதையுடன் விறுவிறுப்பான திருப்பங்களுடன் வெளியாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சமீபத்தில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை விட்டு வெளியேறி ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் குடும்பமே சோகத்தில் உள்ள நிலையில், மற்றொரு பேரிடியாக அமைந்துள்ளது லட்சுமியின் மரணம்.

சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய லட்சுமி, அவரது கணவரின் நினைவுநாளில் மரணமடைந்துள்ளார்.

அவரை படுக்கையில் சடலமாக பார்த்த மகன்கள், மருமகள்கள் கதறி அழுவது போன்ற ப்ரோமா காட்சிகள் வெளியாகியுள்ளன.

Sharing is caring!