மகன் வீடியோ கேம் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்ட ம.கா.பா. ஆனந்த்

மகன் கேம் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பல ஆண்டுகள் எப்எம் ரேடியோவில் பணிபுரிந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளரான பின் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண் சுசினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாகாபா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வீடியோ கேம் ரிமோட்டை வைத்துக் கொண்டிருக்கும் மாகாபாவின் தோள் மீது கால் வைத்து அவரது மகன் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியமடைந்து வருகின்றனர் .

Sharing is caring!