இலங்கை பெண்ணுக்காக சுருதி எடுத்த முடிவு… இறுதியில் ராஜுவின் முகத்திரையை கிழிந்தது!

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுருதி பெரியசாமி இந்த வாரம் வெளியேறி விட்டார்.

ஆனால் கடைசி வரைக்கும் தாமரையிடம் இருந்து பெற்ற அந்த காயினை பயன்படுத்த அவருக்கு எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

போகிற போக்கில் இதுதான் சரியான தருணம் என ராஜு ஜெயமோகனின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டு சென்றுள்ளார்.

அபிநய் மற்றும் சுருதி கடைசி இடத்தில் இருந்த நிலையில் சுருதியின் பெயரை கமல் காட்டியதும் காயினை தான் பயன்படுத்த போவதில்லை என முடிவெடுத்த சுருதி அந்த காயின் இலங்கை பெண் மதுவுக்காவது பயன்படட்டும் என நினைத்து ஸ்பீக்கருக்கு பின்னால் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

ஆனால், பிக்பாஸ் அந்த காயினோடு பிக் பாஸ் வீட்டின் மெயின் டோர் வழியாக வெளியேறுங்கள் என சுருதிக்கு உத்தரவு போட மதுவிடம் கொடுத்த காயினை வாங்கிக் கொண்டு சுருதி வெளியேறும் போது பாவனி, நிரூப் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் அந்த காயினை பயன்படுத்து மீண்டும் வீட்டுக்கு வா என கெஞ்சினர்.

ஹவுஸ்மேட்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய சுருதி ராஜு ஜெயமோகனிடம் சென்று நீங்க அப்படி பேசியிருக்கக் கூடாது. நீங்க பண்ண வேலையால் தான் நான் இப்போ வெளியே போறேன் என்பது போல பேசி ராஜு ஜெயமோகனின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டு வெளியேறினார்.

இந்த சீசனில் இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள் யாருமே அகம் டிவி வழியாக போட்டியாளர்களை பார்த்து தங்களின் கருத்தை சொன்னது கிடையாது.

இந்நிலையில், அந்த வாய்ப்பை சுருதிக்கு கமல் கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சுருதி மீண்டும் ராஜுவை பங்கமாக வச்சு செய்தார். ராஜுவை மட்டுமின்றி அவருக்கு பிடிக்காத அக்‌ஷரா, இமான் அண்ணாச்சி, வருண் உள்ளிட்டோர் மீது குறை கூறிவிட்டு கிளம்பினார்.

Sharing is caring!