இன்று பிறந்ததினத்தை கொண்டாடுகிறார் த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் தனி ரசிகர் பட்டாளத்தை தனதாக்கிக் கொண்ட நடிகை த்ரிஷா இன்று (04) தனது 38 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார்.

2002 ஆம் ஆண்டு வௌியாகிய மௌனம் பேசியதே படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன் பின்னர், சாமி, திருப்பாச்சி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கில்லி அடங்கலாக பல வெற்றிப் படங்களை தன்வசப்படுத்தினார் த்ரிஷா.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் நடித்துள்ளார் த்ரிஷா.

அண்மையில் வௌியாகிய ’96’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

ஜானுவாகவும் த்ரிஷாவாகவும் தமிழ் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகின்றார் இவர்.

Sharing is caring!