ஃபலூடா செய்யும் முறைகள்! இதோ..!!

என்னென்ன தேவை?

சேமியா – 1/4 கப்,
சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன்,
ஐஸ்கிரீம் – 2 கரண்டி,
டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன்,
செர்ரி – 2 டேபிள்ஸ்பூன்,
பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது).

எப்படிச் செய்வது?

சேமியாவை வேக வைத்துக் கொள்ளவும். சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு நீள கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் வேக வைத்த சேமியாவை வைத்து, ஒன்றன்மேல் ஒன்றாக சப்ஜா விதை, ஐஸ்கிரீம், செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி பரிமாறவும்.

Sharing is caring!