ஃப்ரூட் தயிர் சாதம்

ஃப்ரூட் தயிர் சாதம்

தேவையானவை:

அரிசி – கால் கிலோ,
திராட்சை – 100 கிராம்,
மாதுளம் முத்துக்கள் – ஒரு கப்,
வாழைப்பழம், ஆப்பிள் – தலா ஒன்று,
புளிக்காத தயிர் – ஒரு கப், முந்திரி – 10.

செய்முறை:

அரிசியைக் குழைய வடித்து, தயிர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, மாதுளம் முத்துக்கள் போட்டுக் கலந்து, அதன் மேல் முந்திரி வறுத்துப் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

குழந்தைகளுக்கு விருப்பமான பழங்கள் எதுவாயினும் தயிர் சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.

Sharing is caring!