அட்டகாசமான சுவையில் ரஸ்க் அல்வா செய்முறை உங்களுக்காக!!!

கோதுமை அல்வா, கேரட் அல்வா ஏன் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா கூட சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட் அல்வா கூட டேஸ்ட் பார்த்து இருப்பீங்க. ரஸ்க் வைத்து எளிய முறையில் அருமையான அல்வா. இதோ செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்: ரஸ்க் தூள் – 1 கப்,  சர்க்கரை – 1 1/2 கப், பால் – 2 கப், முந்திரி – தேவையான அளவு, உலர்ந்த திராட்சை – தேவையான அளவு,  நெய் – கால் கப்

செய்முறை: முந்திரி,  உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ரஸ்க் தூள், பால் சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் சர்க்கரையை சேர்க்கவும். இடைஇடையே நெய்யை சேர்க்கவும்.

பால் சுண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து இறக்கவும். சூப்பரான ரஸ்க் அல்வா ரெடி.

Sharing is caring!