அவல் பகளாபாத்

தேவையானவை: அவல் – ஒரு கப், தயிர் – ஒரு கப்,  கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை – தலா 10, மாதுளம் முத்துக்கள் – 2 டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் –  ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். தயிர், உப்பு, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, மாதுளம் முத்துக்களை சேர்த்து, அப்படியே பிசிறிய அவலில் கொட்டி கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கிள்ளிய கறிவேப்பிலை  தாளித்து, அவல் கலவையில் சேர்த்துக் கலக்கினால்… அவல் பகளாபாத் ரெடி!

Sharing is caring!