ஆரோக்கியமான காலை உணவாக சிவப்பு அரிசி ஊத்தப்பம் செய்யுங்கள்!!!

காலை வேளையில் சத்தான டிபன் சாப்பிடுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக சிவப்பு அரிசி ஊத்தப்பம் செய்யும் முறை குறித்து உங்களுக்காக!

தேவையான பொருட்கள்: சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெங்காயம் – ஒன்று, ப.மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் அதை நன்றாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து கரைத்து ஒரு மணிநேரம் அப்படியே வைக்கவும்.

மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை கனமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும். சூப்பரான சத்தான சிவப்பு அரிசி ஊத்தப்பம் ரெடி.

Sharing is caring!