ஆரோக்கியமான சுவை நிறைந்த கருப்பட்டி கேழ்வரகு தோசை செய்முறை!

குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க வேண்டும் என்பதுதான் அம்மாக்களின் விருப்பம், ஆனால் எந்த டிபன் செய்தாலும் குழந்தைகள் அதை முழுமையாக சாப்பிடுவது இல்லை. இதற்காக கருப்பட்டி கேழ்வரகு தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கேழ்வரகு கருப்பட்டி தோசை செய்ய தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், கருப்பட்டி – அரை கப், தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும். கல், மண் போக வடிகட்டி ஆறவிடவும். அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, கருப்பட்டி கரைசல், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும். சூப்பரான சத்தான கேழ்வரகு கருப்பட்டி தோசை. குழந்தைகள் இன்னும் ஒன்று… இன்னும் ஒன்று என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Sharing is caring!