ஆரோக்கியம் தரும் சமபோச ரொட்டி

10  – 12 ரொட்டி

தேவையான பொருட்கள் 

 • சமபோஷ மாவு – 200 கிராம்
 • சிறிதாக வெட்டப்பட்ட  வெங்காயம் – 2 மே. க
 • சிறிதாக வெட்டப்பட்ட பச்சைமிளகாய் –  1 மே. க
 • தேங்காய் பூ – 3 மே. க
 • முருங்கை இல்லை – 8 மே. க
 • தே. எ / மஜரீன் – 2 மே. க  ( மட்டமாக )
 • பால் – 1/2 தம்ளர்
 • கரட் – 100 கிராம்
 • உப்பு தூள் – அளவிற்கு
 • மிளகு தூள் – அளவிற்கு
செய்முறை :- 
 • முருங்கை இலைத் துப்புரவு செய்து கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுக .
 • கரட்டை துப்புரவு செய்து கழுவிச் ஸ்கிறேப்பரில் துருவிக் கொள்க .
 • தாய்ச்சியை  அடுப்பில் வைத்து 2 மேசை கரண்டி மாஜரீன் விட்டுக் கொதித்ததும் சிறிதாக வெட்டிய வெங்காயம் , பச்சை மிளகாய் என்பவற்றை இட்டு வதந்கவைத்து வதங்கியதும் முருங்கை இல்லை , கரட் என்பவற்றை இட்டு சிறிது நேரம் வதங்கவிடவும் . இவை ஓரளவு வதங்கியதும் தேங்காய் பூ , மிளகு தூள் , உப்புத்தூள் என்பவற்றையிட்டு  நன்கு சேர்த்துக் கொண்ட பின்பு அடுப்பில் இருந்து இறங்கி கொள்க .
 • சமபோஷ மாவை அரித்துப் பாத்திரத்தில் இட்டு தாளித்த கலவையை அதனுள் கொட்டி பாலும் விட்டு அளவிற்கு தண்ணீரும் விட்டு ரொட்டி மா பதத்திற்கு குழைத்து உருண்டைகளாக உருட்டி , ரொட்டிபோல் தட்டி எண்ணெய்யை பூசிய தோசை கல்லில் இட்டு
 • வாட்டிக் கொள்க .

Sharing is caring!