இஞ்சி சட்னி செய்வது எப்படி ??

இஞ்சியில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன.

அஜீரணக் கோளாறை இஞ்சி சரி செய்யும். சளி, இருமல் இருப்பவர்கள் இந்த சட்னியை செய்து சாப்பிட்டால் நெஞ்சில் கட்டும் சளி கரைந்து போகும்.

தேவையான பொருட்கள்

  • இஞ்சி – 1/2 கப் நறுக்கியது
  • காய்ந்த மிளகாய் – 5
  • கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • புளி – ஒரு கோலி அளவு
  • வெல்லம் – 1 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவைக்கு ஏற்ப
  • கடுகு – சிறிதளவு

செய்முறை:

  • இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
  • ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வேண்டும்.
  • சுவையான இஞ்சி சட்னி தயார்

Sharing is caring!