இறால் சுக்கா மசாலா செய்வது எப்படி ?

கடல் உணவுகளில் இறால் ஒரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருள். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருளும் கூட. இந்த இறாலை பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும் ஒரு சுவையான இறால் ரெசிபி தான் இறால் சுக்கா மசாலா.

கீழே இறால் சுக்கா மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

* தேங்காய் – 1/2 கப்

* வரமிளகாய் – 5

* பூண்டு – 4-5

* கறிவேப்பிலை – சிறிது

* சோம்பு – 2 டீஸ்பூன்

மசாலாவிற்கு…

* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* இறால் – 500 கிராம்

* மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் இறாலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* பின் மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு 1-2 நிமிடம் வதக்கவும்.

* பிறகு அதில் சுத்தம் செய்த இறால், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மூடி வைத்து 5-8 நிமிடம் வேக வைக்கவும்.

* பின் மூடியைத் திறந்து பிரட்டி விட்டு ஒரு 2 நிமிடம் வேக வைக்கவும்.

* இறுதியில் மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து சேர்த்து பிரட்டினால், சுவையான இறால் சுக்கா மசாலா தயார்!

Sharing is caring!