உடல் எடை குறைக்கும் கொள்ளு சட்னி

தேவையான பொருட்கள்

கொள்ளு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 1/2 கோப்பை
தக்காளி – 1
புளி – 1 கொட்டை
வர மிளகாய் – 2
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 10 பல்லு
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. கொள்ளை தண்ணீரில் (சுமார் 4 மணி நேரம்) ஊற வைத்து களைந்து கழுவி, நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

4. பிறகு வர மிளகாய், தக்காளி, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. அதனுடன் சீரகம், மிளகு, புளி சேர்க்கவும்.

6. அனைத்தையும் நன்றாக வதக்கிய பிறகு கொள்ளை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

7. ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

8. தனியே வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை அரைத்த சட்டினியுடன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்பு:

1. கொள்ளில் சிறு சிறு கற்கள் இருக்கும். அதனால் நன்றாக களைந்து வேக வைக்கவும்.

2. உடல் எடையை குறைக்கவும், சளித் தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் பெறவும் கொள்ளு மிகவும் பயனளிக்கும்.

Sharing is caring!