என்றும் சுவை நிறைந்த வெண்டைக்காய் மசாலா குழம்பு செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள் :1/4 கிலோ வெண்டைக்காய்,1 பெரிய வெங்காயம், 6டேபிள்ஸ் பூன் எண்ணெய்,1 ஸ்பூன் கடுகு,சிறிது கறிவேப்பிலை,சிறிது கொத்தமல்லி தழை,தேவையானஅளவு கல் உப்பு, தேவையானஅளவு உப்பு,1/4 கப், திக்கான புளிக்கரைசல்,1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்,2 ஸ்பூன் சாம்பார் பொடி.
மசாலா அரைக்க:1 கப் சின்ன வெங்காயம்,4 பல் பூண்டு,
3 தக்காளி, 1/4 கப் தேங்காய் துருவல்,1 ஸ்பூன் சீரகம்,
1/2 ஸ்பூன் மிளகு,2 ஸ்பூன் கொத்தமல்லி விதை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்

4 வரமிளகாய்,,சிறிது கறிவேப்பிலை 1 துண்டு இஞ்சி,சிறிது எண்ணெய்
வெண்டைக்காயை கழுவி துடைத்து பின் பொடியாக நறுக்கி 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் இருந்து சீரகம், மிளகு, வரமிளகாய்,பெருங்காயத்தூள்,கொத்தமல்லி விதை,ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.பின் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கி பின் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின் வெங்காயம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி தனியாக எடுத்து வைக்கவும்.
பின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் வதக்கிய அனைத்தும் ஒன்றாக சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்வாணலியில், எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.பின் புளிக்கரைசல் விட்டு சாம்பார் பொடி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்.பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்நன்கு கொதித்ததும் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Sharing is caring!