என்றும் மறக்க முடியாத சுவை கொண்ட கோழி சூப்..!

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/4 கிலோ
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பூண்டு – 6 பல்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1/4 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கொத்தமல்லக் கீரை – ஒரு கைப்பிடியளவு
மிளகுப் பொடி – தேவைக்கேற்ப

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். பூண்டு, வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கர் அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.

பின்பு நறுக்கிய போண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கிய பின்பு சிக்கன், கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி அதோடு தண்ணீர் சேர்த்துவிடவும். குக்கர் என்றால் 3 விசில் விடவும். இறுதியாக கொஞ்சம் மிளகு பொடி சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Sharing is caring!