எலும்புகளை பலமாக்கும் கம்பு புட்டு

தேவையான பொருட்கள்

கம்பு மாவு -2கப்
வெல்லம் – 1 1/2 கப்
தேங்காய்துருவல் -1கப்
முந்திரிப் பருப்பு -5
நெய் -3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1டீஸ்பூன்

செய்முறை

கம்பை நன்றாக கழுவி கொள்ளுங்கள். நன்றாக என்பது குறைந்த பட்சமாக நான்கைந்து முறைகளாவது நன்றாக அலசி, கம்பில் கலந்திருக்கும் கற்களை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவில் கல், மண் தட்டுப்படும். நன்றாக கழுவிக் கொண்ட பிறகு, தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, நல்ல வெயிலில் ஈரமாக இருக்கும் கம்பு நன்கு மொறுமொறுவென வரும் வரையில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், சூடான வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, படபடவெனப் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த கம்பை இப்போது நைசான மாவாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

Sharing is caring!