ஓமப்பொடி

ஓமப்பொடி

தேவையானவை:

அரிசி மாவு – கால் கிலோ,
கடலை மாவு – 200 கிராம்,
ஓமம் – 25 கிராம்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஓமத்தை ஊற வைத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, வெண்ணெய், உப்பு, அரைத்த ஓம விழுது… இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு:

இது, ஓம வாசனையுடன் மாலை நேர டிபனுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ஓமம் ஜீரணத்துக்கு நல்லது.

Sharing is caring!