காலிப்ளவர் பொடிமாஸ் செய்வது எப்படி?.!!

தினமும் நாம் ஒரே வகையான சாதங்களையோ அல்லது சாப்பாட்டு பொருட்களை குழந்தைகளுக்கு செய்து வழங்கினால்., நமது குழந்தைகள் சாப்பாட்டின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு வித விதமான உணவு வகைகளை செய்து கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உண்ணுவார்கள்.

எக் காலிஃபிளவர் பொடிமாஸ் தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் – ஒரு பூ.,
முட்டை – 2 எண்ணம் (Nos).,
வெங்காயம் – 1 எண்ணம்.,
மிளகுத்தூள் – 1 தே.கரண்டி.,
நெய் அல்லது எண்ணெய் – 3 தே.கரண்டி.,
உப்பு – தே.அளவு…

எக் காலிஃபிளவர் பொடிமாஸ் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட காலிபிளவரை நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் வானெலியில் நெய்யை ஊற்றி காலிப்ளவர் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பாத்திரத்தை திறந்து நன்றாக கிளறிவிட்டு., அதில் உப்பு., மிளகுத்தூள் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கிளறி., மேலும் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.

சுமார் மூன்று நிமிடங்கள் கழித்த பின்னர் மற்றொரு முறை நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்… தேவை இருப்பின் இதனுடன் கேசரி பவுடரை சேர்த்தால் சுவையும்., மனமும் கிடைக்கும்.

Sharing is caring!