கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி?

கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது செய்யப்படும் ஒரு அருமையான இனிப்புப் பண்டம் தான் கலகலா பலகாரம்.

கலகலா, கல்கல், குல்குல் எனறு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
இது நல்ல சுவையும் மீண்டும் மீண்டும் சாப்பிட கூடிய எண்ணத்தையும் வர வைக்கும்.
அந்தவகையில் தற்போது சுவையான இந்த கலகலா பலகாரத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மா – 1 கிலோ
தாவர நெய் – 100 கிராம், முட்டை – 2, உப்பு – தேவையான அளவு
செய்முறை:முதலில் கோதுமை மாவையும், நெய்யையும் மாற்று உப்பையும் கலந்து நன்கு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின் 2 முட்டையை உடைத்து ஊற்றி அதையும் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.அதன் பின் பிசைந்த மாவை 2 மணி நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும்.அதன் பின் அந்த மாவை எடுத்து நமக்கு தேவையான மற்றும் பிடித்த வடிவங்களில் செய்து பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது நமக்கு தேவையான கலகலா தயாராகி விட்டது.

Sharing is caring!