குழந்தைகளுக்கு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பீட்ரூட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பீட்ரூட்டை வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1,

தக்காளி – 1,
வெங்காயம் – 1,
கீறிய பச்சைமிளகாய் – 2,
குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை :

பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.

சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி.

Sharing is caring!