குழந்தைகள் விரும்பும் வெஜ் கீ ரைஸ் செய்து கொடுத்து அசத்துங்கள்

திருச்சி:
ஒரே மாதிரி சமைத்தால் குழந்தைகள் வெறுப்படைந்து விடுவார்கள். குழந்தைகள் விரும்பும் விதத்தில் அதே நேரத்தில் எளிதாக அவர்களுக்கு வெஜ் கீ ரைஸ் செய்து தருவது பற்றி இதோ உங்களுக்காக..!

விதவிதமாக சமைத்து தரும்போதுதான் குழந்தைகள் நன்றாக சாப்பிடுகிறார்கள். அவர்கள் எளிதாக, அதிக செலவு இல்லாமல் வெஜ் கீ ரைஸ் செய்யும் முறை பற்றி பாருங்கள்.

தேவையான பொருள்கள்: பாசுமதி அரிசி – 2 கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி, – கால் கப் வெங்காயம் – ஒன்று நெய் – 3 ஸ்பூன், பிரிஞ்சி இலை – இரண்டு பட்டை – ஒரு துண்டு கிராம்பு – 2ஏலம் – 2 , மிளகு – 5 முந்திரி – 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – 2 கொத்துமல்லி தழை –சிறிது சிவப்பு பச்சை மிளகாய் – ஒன்று.

செய்முறை: அரிசியை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். குக்கரில் நெய்யை விட்டு பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலம், மிளகு, முந்திரி பொடியாக அரிந்து போட்டு பொரிய விடவும். வெங்காயம், இஞ்சி பூண்டு, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.  கேரட், பீன்ஸ் பொடியாக அரிந்து பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு ஊறிய அரிசி சேர்த்து உடையாமல் கிளறவும். அரிசி ஒரு டம்ளருக்கு, ஒன்றரை டம்ளர் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி தக்காளி பழத்தை இரண்டாக அரிந்து போட்டு குக்கரில் 2 விசில் விட்டு  இறக்கினால் சுவையான வெஜ் கீ ரைஸ் தயார். அப்புறம் என்ன உங்கள் வீட்டு குழந்தைகள் உற்சாகமாக சாப்பிடுவதை கண்டு மகிழுங்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!