கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்து அசத்துங்க… அசத்துங்க!!!

திருச்சி:
எப்போதும் ஒரே மாதிரிதான் சமைப்பீங்களா அம்மா என்று உங்கள் வீட்டு குழந்தைகள் கேட்கிறார்களா! அப்ப அவங்களை அசத்த கொத்தமல்லி சாதம் செய்து கொடுங்க… அப்புறம் என்ன உங்களையே சுற்றி சுற்றி வருவாங்க.

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப், கொத்தமல்லி கட்டு – 1 கட்டு, இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 1, பட்டை, லவங்கம் – 1, ஏலக்காய் – 1, முந்திரி, உப்பு, நெய் – தேவைக்கு.

எப்படி செய்யணும்….!!!
பச்சை கொத்தமல்லியை மண் போக அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ப்ரஷர் பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ‘ ஸ்டீம்’ வந்ததும் ‘வெய்ட்’ போடவும் அடுப்பை ‘சிம்மில்’ 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும். அருமையான சுவையில் கொத்தமல்லி சாதம் ரெடி.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!