கோதுமை ரவா உப்புமா

கோதுமை ரவா உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை – கால் கிலோ,
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று,
பீன்ஸ் 10, கடுகு, கறிவேப்பிலை,
உளுத்தம்பருப்பு – தேவையான அளவு,
எலுமிச்சம்பழம் – அரை மூடி,
கொத்தமல்லி (நறுக்கியது) – கைப்பிடி அளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, வாணலியில் உள்ள கலவையில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

கொதித்துக் கொண்டிருக்கும்போது கோதுமை ரவையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும். இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு:

இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!

Sharing is caring!