சக்கரைவள்ளி கிழங்கு அல்வா செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள்:

சக்கரைவள்ளி கிழங்கு‍‍ – 100 கிராம்
சீனி – 100 கிராம்
நெய் – சிறிதளவு
முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை – தேவையான அளவு

செய்முறை:

சக்கரைவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவும், கிழங்கின் தோலை நீக்கி அதை நன்கு மசித்து கொள்ளவும் கிழங்குடன் சீனியும் கலந்து வைத்து கொள்ளவும் பின் நெய்யில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும், கடைசியாக கிழங்கும் சீனியும் கலந்த கலவையை நெய் விட்டு நன்றாக கிளறவும்.

முந்திரி பருப்பையும் அதனுடன் கலந்து பரிமாறவும். எளிமையான இனிப்பு வகையாக இருந்தாலும் மிகவும் சுவையாக இருக்கும்.

Sharing is caring!