சத்து மாவு

சத்து மாவு மிகவும் உடல் ஆரோகியத்தையும் ,வலுவையும் கொடுக்கும் .

சத்து மாவு தயாரிக்க தேவையானவை :

1.ஜவ்வரிசி – 50 கிராம்
2.காபூலி சென்னா (வெள்ளை கொண்டைக்கடலை) – 150 கிராம்
3.வேர்க்கடலை (அ) நிலக்கடலை – 100 கிராம்
4.வறுத்த கடலைப்பருப்பு – 100 கிராம்
5.கோதுமை – 100 கிராம்
6.அரிசி – 50 கிராம்
7.ராகி – 150 கிராம்
8.உலர்ந்த பச்சை பட்டாணி – 50 கிராம்
9.உளுத்தம்பருப்பு – 50 கிராம்
10.காய்ந்த மொச்சைக்கொட்டை – 50 கிராம்
11.மக்காச்சோளமணிகள் – 200 கிராம்
12.கொள்ளு – 50 கிராம்
13.இந்த நான்கையும் வறுக்கக்கூடாது
பாதாம்பருப்பு – 200 கிராம்,
முந்திரிப்பருப்பு – 200 கிராம்,
பிஸ்தாப்பருப்பு – 200 கிராம்,
ஏலக்காய் – 25 கிராம்

செய்முறை:

மேல் குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக சூடான கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் குளிர வைத்து எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு மெல்லிய ரவை பதத்தில் அரைத்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும். பத்து மாதம் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு பால் சேர்த்தோ, சர்க்கரை சேர்த்தோ கொடுக்கலாம்.

Sharing is caring!