சப்பாத்தி ருசியாக இருக்க, கேக் செய்யும் போது கவனிக்க டிப்ஸ்

சென்னை:
சமையல் ருசியாக இருக்க சில விஷயங்களில் இப்படி கவனம் செலுத்தினால் உங்களை புகழ்ந்து தள்ளி விடுவார்கள்.

கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் மற்றும் அரிசி மாவையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தாமல் மரத்தால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

தேங்காயை தண்ணீரில் நனைத்து உடைத்தால் சரிபாதியாக உடையும். இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

 

Sharing is caring!