சப்போட்டா மில்க்ஷேக்

தேவையானவை: சப்போட்டா பழம் – 4, பால் (காய்ச்சியது) – ஒரு லிட்டர், சர்க்கரை – கால் கப்.

செய்முறை: சப்போட்டா பழங்களை ‘கட்’ செய்து உள்ளிருக்கும் விதையை நீக்கிவிட்டு, ஸ்பூனால் சதைப்பற்றை மட்டும் எடுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து, சிறிது பால் விட்டு அரைக்கவும். நன்கு மசிந்ததும் மீதமுள்ள பாலை மிக்ஸியில் விட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால்… சப்போட்டா மில்க் ஷேக் தயார்!

 

Sharing is caring!