சளி, இருமலை குணப்படுத்தும் சூப்பர் சூப்!

பொதுவாக மழைக்காலம் என்றாலே போதும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை நம்மை வந்து ஒட்டி கொள்ளும்.

இந்த சமயங்களில் பலருக்கு சூடாக எதையாவது குடிக்க வேண்டும் என்று தோன்றும்.

இதற்கு வெற்றிலை, துளசி சேர்த்து சூப் மிகவும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் இந்த சூப்பை எப்படி தயாரிப்பது என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • தண்ணீர் – 1 கப்
 • சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
 • மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
 • மஞ்சள்ப் பொடி – 1 டீஸ்பூன்
 • துளசி இலை – ஒரு கைப்பிடி அளவு
 • வெற்றிலை – 6 இலைகள்
 • தூதுவளை இலை – ஒரு கைப்பிடி அளவு
 • புளி கரைசல் – ஒரு டீஸ்பூன்
 • இஞ்சி – ஒரு துண்டு
 • தக்காளி – ஒன்று
 • சிவப்பு மிளகாய் – ஒன்று
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.

நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

Sharing is caring!