சாத பக்கோடா

தேவையானவை: சாதம் – ஒரு கப், கடலை மாவு – 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் –  ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சாதத்தை மசித்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை  சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண் ணெயை சூடாக்கி, சாதக் கலவையில் இருந்து சிறிது, சிறிதாக  கிள்ளி எடுத்து எண்ணெயில் போடவும். (உருட்டி போடக் கூடாது). வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து அரித்து எடுக்கவும்.

குறிப்பு: கரகர என்று டேஸ்ட்டாக இருக்கும் இந்த பக்கோடாவை, மிகக் குறைவான நேரத்தில் செய்துவிடலாம்.

Sharing is caring!