சிறுதானிய சமையல்! குழந்தைகளுக்கு சத்து தரும் குதிரைவாலி ஆப்பம்!

குதிரைவாலி ஆப்பம்

சமீப காலங்களாக மக்களுக்கு சிறுதானியங்களின் மேல் அதீத அக்கறை ஏற்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் இந்த சிறுதானிய சமையலைச் சாப்பிட்டு தான் நூறு வயது வரையில் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.  பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி ஆப்பம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை
குதிரைவாலி –  முக்கால் டம்ளர்
பச்சரிசி –  கால் டம்ளர்
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
தேங்காய் –  சிறிது
சாதம் – ஒரு தேக்கரண்டி
தோசை மாவு –  2 கரண்டி
சர்க்கரை –  ஒரு தேக்கரண்டி
உப்பு –  தேவையான அளவு

முதலில் குதிரைவாலி, பச்சரிசி, ஜவ்வரிசி மூன்றையும் ஐந்து மணிநேரம் ஊற வைத்து, ஊறியதும் தேங்காய், சாதம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த உடன் அதில் தோசை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் அதில் சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் மாவை தோசைக்கல்லில் ஊற்றி, மூடி வைத்து ஆப்பமாக சுட்டு எடுக்கவும். சுவையான சத்தான குதிரைவாலி ஆப்பம் தயார்.

Sharing is caring!