சீரக கஞ்சி

4 – 6 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் :

 1. பச்சை அரிசி – 1 சுண்டு ( நிரப்பி )
 2. நற்சீரகம் – 2 மே. க ( நிரப்பி )
 3. மிளகு – 1 தே . க ( நிரப்பி )
 4. மஞ்சள் – 2″ துண்டு
 5. உப்பு – அளவிற்கு
 6. தண்ணீர் – 4 போத்தல்
செய்முறை :
 • தேங்காயை துருவி ஒரு போத்தல் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலை பிழிந்தெடுத்துக் கொள்க .
 • சீரகம் , மிளகு , மஞ்சள் மூன்றையும் எடுத்து தண்ணீரை அளவிற்கு விட்டு பசுந்தையாக அரைத்துக் கொள்க .
 • பின்பு அரைத்த கூட்டை தீங்கை பாலில் இட்டு கரைத்து வைத்துக் கொள்க
 •  பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து , கொதித்த பின்பு அரிசியை கழுவிப் போட்டு அவியவிடவும் . அரிசி முக்கால் பதமாக அவிந்த பின்பு , கரைத்து வைத்துள்ள தீங்கை பால் , அளவுக்கு உப்பு என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .
 • கஞ்சி நன்றாக பொங்கி கொதித்து அவிந்து வாசனை வரத் தொடங்கியதும் நன்றாக துழாவி இறக்கி சூட்டுடனே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .

Sharing is caring!