சுரைக்காய் மட்டன் குழம்பு… வித்தியாசமான சுவை… குடும்பத்தினர் பாராட்டு உங்களுக்குதான்

சென்னை:
செமையாக சமைத்தால் அவ்வளவு… குடும்பத்தினர் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு விஷயம்தான் மட்டன் குழம்பு.

அசைவ பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அதிலும் வித்தியாசமாக அதை செய்யும்போது இன்னும் கூடுதல் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சுரைக்காய் மட்டன் குழம்பு செய்து பார்க்கலாம்.

மட்டன் -அரை கிலோ, சின்ன சுரக்காய் -1, பெரிய வெங்காயம் -2, தக்காளி -1,கொத்தமல்லி தழை-சிறிதுஉப்பு -தேவையான அளவு. பட்டை -2,கிராம்பு -2, எண்ணெய்-தேவையான அளவு. சோம்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிய துண்டு, பூண்டு -2 பல், கசகசா -1 டீஸ்பூன், பொட்டுக்கடலை -2 ஸ்பூன், மிளகு -அரை டீஸ்பூன், சீரகம் -அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் -கால் மூடி. மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன். மல்லி தூள் -2 ஸ்பூன், கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் ).

தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -2 எண்ணெய்-தேவையான அளவு.
அரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிய துண்டு பூண்டு -2 பல் கசகசா -1 டீஸ்பூன் பொட்டுக்கடலை -2 ஸ்பூன் மிளகு -அரை டீஸ்பூன் சீரகம் -அரை டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் மூடி. சேர்க்க வேண்டிய தூள் வகைகள்: மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லி தூள் -2 ஸ்பூன்

முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு, வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதக்கிய பின்பு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் போடவும்.

அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக விடவும். கறி வெந்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவையான சுரைக்காய் மட்டன் குழம்பு தயார். குறிப்பு – மட்டனை குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்பு சேர்க்கவும். ஆஹா என்ன ருசி என்று பாராட்டு மழைதான் உங்களுக்கு.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!